முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறார். இன்று காலை அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை […]