ஒரே இடத்திற்கு இரண்டு பட்டா வைத்திருந்த வீடுகளை இடிக்க வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். திருப்பத்தூர் அருகே ஒரே இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தவறுதலாக இரண்டு முறை பட்டா கொடுத்துள்ளனர் என தெரிகிறது. மேலும், தவறுதலாக பதியப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புநிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால், அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், குடியிருப்புகளை இடிக்க ஜேசிபி எந்திரம் வந்துவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜேசிபி எந்திரந்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் […]
அனைத்து மக்களின் வாழ்விட உரிமையை பாதுகாக்க கிராம சபைகள் உறுதியேற்க செய்திட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில் விவாதிக்க வேண்டிய பொருள்களின் பட்டியலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். அதில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள […]