கடந்த ஒரு வாரமாக கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாம் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த தீபாவளியன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள். நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். […]
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் சென்றார். முதல்வர் அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் […]
பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, 81 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, பயிற்சி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், ரூ.4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி பாசி மாலை […]
நேற்று சென்னை கே.கே.நகரில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவரது தந்தை மோகன் இறந்து விட்டதால் தாயார் சங்கரியின் பராமரிப்பில் இருந்தார். கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில், அஸ்வினி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி முடிந்ததும் வெளியே வந்த அவர், கல்லூரிக்கு எதிரே தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் […]