உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் […]
தன்பாலின ஈர்ப்பு திருமணம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்பாலின திருமணத்திற்கு சில நாடுகள் திருமணத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அலகாபாத்தில் தனது 23 வயது மகளை 22 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக கடத்தி வைத்துள்ளதாக கூறி அஞ்சு தேவி என்ற பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 6ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் […]
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும், பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் என்பவர் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு […]