அலகாபாத் பல்கலைக்கழக அருகே 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பல்கலைக்கழக விடுதி அறைகளை காலி செய்ய உத்தரவிட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 2 போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், சில அறைகளில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவர்களை அப்புறப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், போலீசாரின் 2 வாகனங்களை தீவைத்துக் கொளுத்தினர்.