இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் […]