தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு திருவிழாவும் இவ்வாண்டு நடக்க வில்லை. மேலு ஊரடங்கு தளர்வால் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது […]
வாரத்தில் இனி அரசு அலுவலகங்களில் ஆறு நாட்களும் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு: நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் […]
ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்குகின்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியர்களை நேரில் அழைப்பார். இவ்வாறு […]
இந்தியாவில் கொரோனாவின் வேகம் தனியாத சூழலில் பல்வேறு மாநிலங்களுக்கு பிழைப்புக்காக வெளிமாநிலங்களில் சென்று தற்போது சிக்கி தவித்து வந்த சூழலில் தற்போது ,வெளிமாநிலங்களிலிருந்து அந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். அதில், அவ்வாறு திரும்பும் தொழிலாளர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தவும், அவ்வாறு 21 நாட்கள் முடிந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த […]
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடமும் சமுக வலைதளங்களிலும் தினந்தோறும் பேசி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில், உலக சுகாதார அமைப்பின் மீது இருக்கும் கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளர். அவரது கோவம், சீனாவை மையமாகக் கொண்டவையோ என்று அனைவரையும் சிந்திக்க தோன்றுகிறது என்றும், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பதிலளிப்பதில் ஒரு பயனும் இல்லை என்று கோபமாக கூறினார்.மேலும், அவர் உலகசுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. […]
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தரப்பினரும் சற்று சறுக்களை சந்தித்தனர். இந்நிலையில் தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்காக ஒரு புதிய அறிவிப்பை தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ல அனைத்து வியாபாரிகளும் 1 சதவீதச் சந்தை கட்டணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை எனவும், விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் […]
உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை இந்தியாவிலும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த […]
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவது அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை எதிர்கொள்ளவும் தடுப்பு நடவடிக்கிக்கைகளுக்கு நிதியுதவி பலராலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பாஜ எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவர் என்றும், மேலும், பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ. 1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு அனுப்பிவைப்பா் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த 144 தடையை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய்ய இராணுவமும் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு […]
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,02,325 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அங்கு ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு […]
சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 192 நாடுகளுக்கு வேகமாக பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ தொட்டுவிட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு […]
ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்: சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக தரத்துடன் ரூ.531 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை […]
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் மற்றும் வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் வன்முறையாக மாறியது, இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் குறித்து நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடந்தது. அப்போது இது விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , டெல்லி கலவரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் சாதி, மத, கட்சி பாகுபாடின்றி நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இது தொடர்பாக 700 பேர் மீது […]
கோடைகால தொடங்க உள்ளதால் கோடைகால சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது நாகர்கோவிலில் இருந்து […]
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமரின் டிவிட்டர் கணக்கு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அன்றைய தினம் தனது வாழ்க்கையாலும், பணிகளாலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழுகின்ற பெண்களிடம் தனது சமூக வலைதள கணக்குகளை ஒப்படைக்க இருப்பதாக அன்மையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி பிரதமர் சம்பந்தப்பட்ட டிவிட்டர் கணக்கு சர்வதேச மகளிர் தினமான இன்று பெண் சாதனையாளர்களால் நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல் பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரிசக்தி’ […]
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு , மிகப்பெரிய கவுரவம் அளிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான, பிப்ரவரி 24ம் தேதியை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான, சிறப்பு பரிசாக, ஆதரவற்ற குழந்தைகள், 21 வயதை அடையும்போது, 2 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட, சிறப்பான ஐந்து திட்டங்களை, முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று சமூக நலத் துறை சார்பில், முக்கிய அறிவிப்புகளை, சட்டசபையில் நேற்று, 110 விதியின் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது சிவராத்திரியை முன்னிட்டு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் கன்னியாகுமரியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் வரும் 21., நடைபெறுவதால் அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். 6-வது நாள் சந்திப்பான இன்று அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பேசியதாவது: அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். […]