தனது பிறந்தநாளில் ஆடம்பரங்களை தவிர்த்து, மக்களுக்கு தொண்டு செய்யுமாறு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 27-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளில் ஆடம்பரங்களை தவிர்த்து, மக்களுக்கு தொண்டு செய்யுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழக தோழர்களுக்கு வணக்கம். வடகிழக்குப் பருவமழை பாதிப்பை நேரில் ஆய்வு செய்வதிலும், மக்களை சந்தித்துக் குறைகளைக் கேட்பதிலும், அதிகாரிகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை கூறுவதிலும், […]