இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]
இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது […]
அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம். தமிழ்நாட்டில் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அங்கும் திட்டத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதன்படி, ராமேஸ்வரம் (ரங்கநாத சுவாமி), திருவண்ணாமலை (அருணாச்சலேஸ்வரர்), மதுரை (மீனாட்சி) ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்கள் அனைத்திலும், பின்பற்றப்படும் ஆகம விதிகள் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வினா படிவம் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்ததால் […]
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து. சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பூங்கா இருப்பதாக கூறி, இதனை காலி செய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்கா அமைத்துள்ள இடம் தொடர்பான நில விவகாரம் விசாரணை, நில […]
அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம், குளங்கள் பராமரிப்பை மேற்கொள்ள வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கோயில் குளங்களில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது […]
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில், டி.ஆர். ரமேஷ் என்பவர்,அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்குவதற்கும், அதற்கு செலவு செய்வதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், கோவில் சொத்துக்களை உரிய நடைமுறையை பின்பற்றாமல் பயன்படுத்துவதற்கு வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர் இல்லாமல் இருக்கிறார்கள். கொளத்தூரில் இருக்கின்ற கபாலீஸ்வரர் கோவிலில் […]
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரதமர் மோடியின் மதம்சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்தது? உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள சில கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள […]
பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு திண்டுக்கல்லில்(வேடசந்தூரில்) நடந்த கூட்டமொன்றில் முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும்,அவர்களது வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக,விருதுநகரைச் சேர்ந்த ஒருவரால் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து,புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு […]
அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. கோயில் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் வையப்பமலை சுப்பிரமணியசாமி என்பவர் கோயில் நிலை மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர, பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு […]
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை சார்பில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் ‘டிவி’ துவக்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் என்ற தொலைக்காட்சி துவக்க உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை ‘வீடியோ’ எடுத்து அனுப்ப கோவில் செயல் அலுவலர்களுக்கு அத்துறையின் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை மக்களிடம் […]
அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதே தண்ட செலவு என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுசெயலாளர் முரளிதர ராவ் தலைமையில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த சந்திப்பில் 600 ஏக்கர் கோவில் நிலத்தை வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருப்பது கண்டிக்கதக்கது. கோவில் நிலங்களில் தான் வீடில்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டுமா ஏன் புறம்போக்கு நிலங்களில் கொடுக்கலாமே […]