இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ […]
அரியலூர் மாவட்டம் கீழமாளிகை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞரான சக்திவேல். இந்த இளைஞன் கஞ்சா போதையில் அப்பகுதி கோவிலில் உள்ள பொருட்களை நாசப்படுத்தியுள்ளார். சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புகுந்த சக்திவேல் அங்குள்ள சக்கரம், தேர் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், கோவிலில் உள்ள சாமி சிலைகள் ஆகியவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள கேமராக்கள், மற்றும் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சக்திவேலை சுற்றி […]
நீட் உயிர்க்கொல்லிக்கு மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.இந்த நிலையில், நீட் தேர்வினை எழுதிய அரியலூரை சார்ந்த கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தனக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்குமா..? என அச்சம் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து,தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு அரசியல் […]
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் உள்ள கோவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் தான். இந்த கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜனின் மகன் மாமன்னர் ராஜ ராஜேந்திரன். தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள […]
அரியலூர் மாவத்தில் உள்ள ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன்.இவர் தனது தாய் மாமன் மகளான மாரியம்மாள் என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் பொது பணித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது.இதன் காரணமாக அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் அவரது மனைவி தனது அம்மா வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவரது மனைவியின் அண்ணன் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.அதற்கு முனியப்பன் போகாமல் […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதிக்கு அருகே உள்ள நம்மகுளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுடர்மணி.இவரது மனைவி சங்கீதா.இவர் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் வேலைபார்த்து வருகிறார். இருவருக்கும் குழந்தை இல்லை.இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவர் சுடர்மனியுடன் ஒரே இடத்தில் வேலைபார்த்து வந்துள்ளார்.இருவரும் நண்பர்கள் என்பதால் ஒருவரை பார்க்க ஒருவரின் வீட்டிற்கு ஒருவர் செல்வது வழக்கம். இந்நிலையில் சுடர்மணியின் வீட்டிற்கு சரவணன் செல்லும் போது சங்கீதாவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சரவணன் மதுவை வாங்கி கொண்டு […]
விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். விழுப்புரத்திலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தை, வழுதரெட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும், பண்ருட்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் கல்வீச்சில் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்ந்ததால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிச் சென்றன. விழுப்புரத்தில் […]
சேலம் நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், வாடிக்கையாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் உணவகத்தின் ஆஸ்பெடாஸ் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர். இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் […]