தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை. சீனா, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி ஆறு […]
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட். அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த லிஃப்டில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 12 பேர் மூன்றாவது மாடியில் இருந்து வந்துள்ளனர். எதிர்பாராத வகையில் லிஃப்ட்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி உடைந்ததால் லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதனையடுத்து முதல் தளத்தில் வந்து நின்ற லிப்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அனைவரையும் வெளியேற்றினார். இந்த நிகழ்வு […]
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு ஆகியவை நிச்சய வரவேற்கத்தக்கது. – டி.டி.வி.தினகரன். அண்மையில், சென்னை அரசு மருத்துவமனையில் வீராங்கனை பிரியா , தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததை தொடர்நது, தமிழக அரசு ப்ரியாவின் குடும்பத்திற்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்தது. 10 லட்சம் நிவாரண உதவி, பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்கள் வாசிக்க சொந்த […]
பிரியா உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]
பெரியார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக இருந்த சோமசுந்தர் மற்றும் முடநீக்கியல் துறை உதவி பேராசிரியர் பால்ராம் சுந்தர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் உயிரிழந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக துறை ரீதியிலான நடவடிக்கையும், இந்த உயிழப்பில் உண்மை நிலவரம் கண்டறிய விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் […]
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருந்து தட்டுப்பாடு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. எங்கு மருந்து தட்டுப்பாடு இருந்தாலும் 104 […]
அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தல். அரசு மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தாமல், அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்தி தண்டிக்கும் போக்கினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் […]
தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் ஏற்க தகுந்ததல்ல என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார […]
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதாரப் பணியாளர் சங்கம், மதுரை, மருத்துவத் துறையில் பணியாற்றும் அடித்தளப் பணியாளர்களின் பணி நேரத்தினை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்து ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு […]
அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,. அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை […]
ஜார்க்கண்ட் மாநிலம் கிருதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் முழங்கால் மற்றும் கைகளில் எலி கடித்துள்ள சம்பவம் அரங்கேறி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மே இரண்டாம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால், அருகிலுள்ள தான்பாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக […]
சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. அதன்படி, ராஜீவகாந்தி, ஸ்டான்லி , கீழ்பாக்கம், ஓமந்தூரார் கிண்டி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் […]
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படசுருளில் வழங்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஇஅதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 487 கோடி ரூபாயை திமுக குறைத்து ஒதுக்கியதாலேயே எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பின், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து, 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய […]