அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான். […]
விஜயதசமியான இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு. இன்று விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால், சரஸ்வதியின் ஆசிர்வாததோடு குழந்தைகள் நன்கு கல்வி பயில்வார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அந்த […]
புதுக்கோட்டையில் அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சித்ரா தேவி வழக்கம் போல் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் போதையில், வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் […]
அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மை குழு, இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் […]
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். அதன்படி, வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலைப்பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவளூர் மற்றும் தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மரக்காணம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பள்ளி மாணவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக செங்கல்பட்டு சென்ற முதல்வர் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி கடந்த 1961-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில், வள்ளாலபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான புலிப்பட்டி, வலையபட்டி, அழகர்கோவில்,செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன. இதில், சில வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு மிகவும் சேதமடைந்திருந்தது. இதை அறிந்த முன்னாள் மாணவர்களான 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 […]