தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது […]
தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சத்துணவு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக நீட்டிக்கபடுவதாக அறிவித்துள்ளார். மேலும், அரசுப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி […]