அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டள்ளது. 2015-ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து TNPSC தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக உண்மை தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை […]
கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி. டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை […]
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 53 […]
தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: […]