போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதில் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், போலி ஆவணங்கள் காண்பித்து 20 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று […]
சென்னை தேனாம்பேட்டையில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிசித்து சசிகலா அறிக்கை. அந்த அறிக்கையில், சென்னை தேனாம்பேட்டையில் நிறுவப்பட்டு இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர்அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் […]
பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் எண்ணற்ற நலத் திட்டங்களை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த சமுதாயத்தினரை, பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கவேண்டும் என நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது […]
அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.com மற்றும் http://tndceonline.org என்ற இணையதளங்கள் மூலமாகவும் ,அரசு பலவகை தொழிட்நுட்பக் கல்லூரிக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/ என்ற இணையதளங்கள் […]
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்கிற முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் ஊழியர் தனது பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற காரணத்தால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை எனக் கூறி பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை […]
ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்குகின்ற அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியர்களை நேரில் அழைப்பார். இவ்வாறு […]