அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரியும்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தும் சசிகலா வழக்கு முன்னதாக தொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். உரிமையியல் நீதிமன்றம் போட்ட உத்தரவு: இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் […]