சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று மாலை அய்யனின் நடையானது திறக்கப்படுகிறது. திறக்கப்படும் நடையானது வரும் 18ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சிருத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக வரும் 13 ம் தேதி நடைத் திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுவாமி சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.தை முடிவடைய உள்ளது.அடுத்து மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக அய்யனின் நடை வரும் 13 ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்நிகழ்வினை தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் […]
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 10-ந் தேதி திறக்கப்பட்டது. நாள்தோறும் வழக்கமான பூஜைகளுடன், சிறப்பு வழிபாடுகளான படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்து வருகின்றன. விஷூ பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலில், விஷூ தினத்தில் […]