வட சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு. அயோத்தி தாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழி புலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொற்களின்றி நடத்த முடியாது என்றும் […]