புனிதர் பாட்ரிக் தினத்தை முன்னிட்டு அயர்லாந்தில் அலங்கார அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் மக்கள் அனைவரும் பங்குபெற்று மகிழ்ந்தனர்… பசுமை நிற உடையணிந்த கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தவாறு அயர்லாந்தின் டல்பின் நகர வீதிகளில் உலா வந்தனர். காணுமிடமெல்லாம் பசுமையை குறிப்பிடும் பச்சை நிற உடையுடன் அணிவகுப்புகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அயர்லாந்து சுற்றுலாத்துறையின் சார்பில் உலகெங்கிலும் உள்ள முக்கிய கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் பச்சை நிற ஒளிர்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களும் வெளியிடப்பட்டன.