இந்த திட்டம் திமுக அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு […]
புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு […]
சேலம் மாவட்டத்தில் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? நிதி எங்கிருந்து வந்தது? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி, பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகை மாற்றப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘மாற்றத்தைத் தருவோம்’ […]