ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள் என டிடிவி ட்வீட். அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவதாக கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு […]
அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சி வருவாய் இழப்பு என மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் தகவல். சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சென்னையில் அம்மா உணவகங்கள் ரூ.786 […]
சென்னை:அம்மா உணவகம் மூடப்படாது என்றும்,பயிர் பாதிப்பிற்கு ரூ.132 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால்,சட்டப்பேரவையில் கூட்டுறவு […]
புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு […]
அம்மா உணவக பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பதும், மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளதாகவும்,மேலும்,அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட முதல்வர் வழிவகை செய்திட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் […]
‘அம்மா உணவகம்’ என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு ‘கலைஞர் உணவகம்’ என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று ஓபிஎஸ் குற்றச்சாட்டு. வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் நேற்று கூறியது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
அம்மா உணவகங்களில் இன்று முதல் மீண்டும் மலிவு விலையில் உணவு விற்பனை என்று மாநகராட்சி அறிவிப்பு. சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. மழைக்காலத்தையொட்டி விலையில்லா உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் பழைய முறையில் அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் […]
மழை பாதிப்பு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், போரூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில், உணவை ருசித்து பார்த்து தரத்தை ஆய்வு செய்தார். அதன்பின், ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம், அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், […]