விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன். அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இதனை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக மற்றும் விசிக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி […]
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம். இன்று நாடுமுழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பி அண்ணல் அம்பேத்கர். மேலும் அவர் பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மை வல்லுனராகவும் […]
அம்பேத்கரை இணைக்காமல், அவரை பற்றி பேசாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதவே முடியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இந்தியவில் அரசியல் செய்ய முடியாது. – திருமாவளவன் பேச்சு. நேற்று, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, மணி விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடங்கி வைத்து பேசிய திருமாவளவன், ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6000 […]
தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்துத்துவாவை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்கரை கொண்டாட முடியாது. என பேசியிருப்பார் விசிக தலைவர் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவப்பற்றியும் பேசினார். அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை பௌத்தராக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர் இல்லை. 10 லட்சம் இந்துக்களை பௌத்தர்களாக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர். […]
அம்பேத்கரும்-மோடியும் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடைபெற்று முடிந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சீர்திருத்த திட்டங்களும், அதனை பிரதமர் மோடி செயல்படுத்திய விதம் குறித்தும் எழுதப்பட்டுள்ள அம்பேத்கரும்-மோடியும் – சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளும், செயல்வீரரின் செயல்பாடுகளும்.. எனும் நூல் இன்று வெளியியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது, டெல்லியில், மத்திய ஒலிபரப்புதுறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு உள்ளது. இந்த விழாவில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு […]
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவெல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளனர். இன்று சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் ஜெயந்தியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், […]
இன்று அண்ணல் அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இனி அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என நேற்றே சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைப்பதற்கு அம்பேத்காரின் முழு […]
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி,அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா […]
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.மேலும், அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில்,அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14-ஆம் தேதியில் ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ […]
அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும்,அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி எனவும்,வேண்டியதை சேர்த்த ஓவியர் எனவும் புகழாரம் சூட்டிய முதல்வர்,அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் […]
பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. சென்னை எஸ்பிஐ வங்கியில் அண்ணல் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளர் கௌரிசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கையில் அண்ணல் அம்பேத்கர் படத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய பொருளாதார விவகாரத்துறை சுற்றறிக்கையின்படி தேசிய மைய்யமாக்கப்பட்ட வங்கிகளில் அம்பேத்கர் […]
சென்னை:இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் தொடங்கப்பட்டது. அதன்படி,ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26, “இந்திய அரசியல் சாசன தினம்(அல்லது) இந்திய […]