தமிழகத்தில் அரசு பத்திரப்பதிவு செய்வதற்கு அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்ய விரும்புபவர்கள் குறுகிய கால அவகாசத்தில் ஆவணத்தை பதிவு செய்ய விரும்புவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அதிக பத்திரப்பதிவு நடைபெறும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை தொடர்பான […]
சட்டப்பேரவையில் இன்று கைத்தறித்துறை மற்றும் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி,மானியக்கோரிக்கை மீது கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குறிப்பாக,அரியலூர் சிமெண்ட் ஆலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்கவுள்ளனர். குறிப்பாக போலி பட்டாக்கள் பதிவு செய்வதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் […]
தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும்,பத்திரப்பதிவு மேற்கொள் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்தவேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாக […]
மதுரை:கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன், ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதித்துள்ளார் என்றும்,அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்றும் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக,மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது: “ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.அதற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார்.அவர் அறிவித்தவுடன் போர்க்கால அடிப்படையில் […]