தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் பேட்டி. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய பால் விலை அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்கிறோம். திருவிழாக்களின் போது அதிகமான பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும். அந்த சமயங்களில் அதிகமான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி […]
பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என அண்ணாமலை ட்வீட். ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு, லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த விலையுயர்வுக்குறித்து விளக்கமளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், மத்திய அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வு […]
திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் பெயரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் அமைச்சர் நாசர் மனு. திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், இன்று தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர். […]
ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயம். பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தாண்டு ரூ.85 கோடி […]
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீடியோ கால் பேச்சுவார்த்தை நடத்தை போராட்டத்தை முடித்துவைத்த அமைச்சர் நாசர். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் […]
ஆவின் தொடர்பான கருத்துக்காக அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்துள்ளார். கோவை ஆவின் நிறுவனத்தின் ஆய்வுக்குப் பிறகு,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்:”அண்ணாமலை,தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நானும் ரவுடிதான் என்பதுபோல அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி […]
சென்னை:ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் கடைகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு,மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மூன்றாவது நாளாக இன்று வழங்கினார்.அதேசமயம், அமைச்சர்களும்,அதிகாரிகளும் நிவாரணப்பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,இன்று காலை சோழிங்கநல்லூர்,அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பால்பண்ணை ஆய்வு செய்த […]
பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை. இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, பொது மக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை […]