Thangam Thennarasu – தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் இன்றும் விசாரணை தொடர உள்ளது. முன்னாள், இன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களில் அவர்கள் போதிய ஆதாரமின்றி என கூறி விடுவிக்கப்பட்டாலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக முன்னால அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கும் சென்னை […]
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் அண்மையில் பேரிடர்களை சந்தித்துள்ளன. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு […]
வங்கக்கடலில் உருவாகி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை பெரும் பாதிப்புக்கு உள்ளக்கி உள்ளது மிக்ஜாம் புயல். இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தை நிவர்த்தி செய்ய இன்னும் காலம் ஆகும் என பல்வேறு பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இன்னும் புறநகர் பகுதி ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்றவும் ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதிமுக நிவாரண உதவி கூட்டத்தில் சிறுமி உயிரிழப்பு.. ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு! மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைச்சரின் பதிவில்,கடந்த 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக […]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் […]
டாடா நிறுவனம் போல தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும், தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய உள்ளது.- அமைச்சர் தங்கம் தென்னரசு. தமிழகத்தில் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருக்கும் தோலர்ப்பூங்காவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை […]
ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை இதுவரை தமிழக காவல் துறை செய்து வந்து தற்போது அந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக தமிழக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த விசாரணை குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற பெயரில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.அப்போது,முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த மாநாடு மூலமாக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடுகளை […]
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர், பக்கத்தில், […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.அந்த வகையில்,மதுரை மாவட்டத்தின் மெரினாவாக இருக்கும் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறினார்.இதற்கு பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள்,தங்களது கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று […]
தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் பேசுகையில், தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையகரகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்கா […]
நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள்(மார்ச் 21 ஆம் தேதி) நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.மேலும், இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்றும்,கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்த நிலையில்,தற்போது நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்,நம்ம ஊரு திருவிழா […]
தமிழகம்:இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள வலிமை சிமெண்ட் கீழ்க்கண்ட இரண்டு விலைகளில் கிடைக்கும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருந்தார் இதனையடுத்து,தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘ சிமெண்டை தலைமைச் செயலகத்தில் நடந்த […]
இன்று ‘வலிமை’ சிமெண்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிமெண்ட், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ‘வலிமை’ சிமெண்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
அதிமுக அண்ணாவின் பெயரில் கட்சி, கொடி ஆகியவற்றை வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதாகவும், மற்றவர்கள் அமைத்துள்ளது சர்க்கஸ் கூட்டணி என விமர்சித்தார். அண்ணா […]
தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் வரை முறைகேடாக நகைகடன் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடும்பத்தில் ஒருவர் நகை கடன் பெற்றால் தான் தள்ளுபடி செய்யப்படும் என சொல்லவில்லை. தில்லுமுல்லு செய்து வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பொய்யான […]
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட விழாவாக நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட கலை விழா நடத்தப்படும் என்றும், சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தொல்லியல் நிறுவனம் என்ற பெயர் தமிழ்நாடு […]
உப்பளத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், காஞ்சிபுரம் அருகே ஓரகடத்தில் மருத்துவ உபகரண தொழில்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதுபோன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 250 ஏக்கரில் தோல் […]