நில அபகரிப்பு வழக்கு: சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் […]
அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் டெல்லியில் நடைபெற்ற 28-வது ஜி.எஸ்.டி கூட்டத்துக்குப் பிறகு 50 பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களும் உள்ளன.பல இல்லாமலும் போனது. இருப்பினும் பல பொருள்களின் வரியைக் குறைக்க வேண்டும் என முன்னதாக தமிழக அரசு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேபோல் இந்தக் கூட்டத்திலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழிலாளர்களின் உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது. சிறு தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 20 லட்சம் […]
தமிழக சட்டப்பேரவையில் இருந்து முறுக்கிக்கொண்டு சென்ற மாப்பிள்ளை திரும்பிவந்துவிட்டதாக, மு.க.ஸ்டாலினை, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் சட்டப்பேரவைக்கு மீண்டும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார். கர்நாடக முதலமைச்சரை, கமல்ஹாசன் சந்திப்பதால், எதுவும் நடக்காது எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல், டி.டி.வி.தினகரன் பேச்சு இருப்பதாகவும் விமர்சித்தார். உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்த நிலையிலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளிக்கவில்லை.