சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா தொடக்கம். சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார். முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது இந்நிலையில், அதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 28, 29ம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 436 இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது. மற்ற மாணவர்களுக்கு […]
நிதி சுமையை ஏற்படுத்தி சென்ற முன்னாள் நிதியமைச்சர் உண்மைத் தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று அஇஅதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 487 கோடி ரூபாயை திமுக குறைத்து ஒதுக்கியதாலேயே எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், […]
நீட் தேர்வு கடினமான தேர்வு தான். அதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது. நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 13 மொழிகளில் 198 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் மட்டும் இந்த நீட் தேர்வை 1,10,921 எழுதுகின்றனர். இதில் 40,376 மாணவர்களும், 70,594 […]
இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்கப்படவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்கள் அனைவரும் தடுஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பள்ளிகளுக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]