சென்னையில் நேற்று மாநகர பேருந்து ஒன்று, திருவேர்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு சென்று கொண்டிருந்தது, அப்பொழுது அம்ஜிக்கரை பகுதியை பேருந்து நெருங்கியபோது பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண் பேருந்து இருக்கைக்கு அடியில் இருந்த பலகை திடீரென விலகி அதில் தவறி விழுந்தார். ஊட்டி : கட்டுமான பணியின் போது மண்சரிவு.! 7 பேர் உயிரிழப்பு.! அப்போது அவருடன் பயணம் செய்த சகப்பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதில் சிறு காயங்களுடன் தப்பித்த அந்த பெண்மணியை […]
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நல சங்களான சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள், வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் […]
இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் 2-அம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமைச் […]
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் […]
ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல் […]
ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் […]
மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், கட்டணம் உயர்த்தப்படாது. மக்களின் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து கட்டணத்தை […]
தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், தமிழ்நாட்டு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால், அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துத்துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கொண்டு வந்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரியலூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட காரணம் என்னவென்றால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் […]
சென்னை மாநகர பேருந்துகளில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின். சென்னையில் மாநகரில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், அந்த பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேருந்தில் பயணித்தனர். பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக தமிழ், ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பேருந்து நிறுத்த பெயர்களை […]
மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’ என அமைச்சர் சிவசங்கர் ட்வீட். அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணம் செய்யமாட்டேன். பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், […]
ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் பல்வேறு […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக செப்டம்பர் 30, அக்டோபர் 1-ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கோயம்பேடு உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் சென்னை தவிர்த்து பிற ஊர்களில் […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். தற்போது மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. […]