வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட அனைத்து செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துத்துறை செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் முடிவடைந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகம்:கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதன்காரணமாக,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் […]
சென்னை:அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது. […]