அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016ல் திருச்சி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒன்றுகூடி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை […]
சென்னை கட்டுப்பாட்டு அறையில், மழை பாதிப்புகளை அமைச்சர் நேரு நேரடியாக கண்காணித்து வரும் நிலையில், மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் நேருவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். இந்த நிலையில், அமைச்சர் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாநகராட்சி சார்பாக 990 பம்புகள் மூலமாக தண்ணீர்கள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் மோட்டார் மூழ்கி போவதால், அங்கெல்லாம் புது மோட்டார் பொருத்தப்படுகிறது. மழை பாதிப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரிடம் […]
உதயநிதிக்கும் ஆதரவு தருவோம், அவரது மகன் (இன்பநிதி) வந்தாலும் அவருக்கும் ஆதரவு தருவோம்.- அமைச்சர் கே.என்.நேரு. சேலத்தில் நேற்று திமுக கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் உதயநிதி பற்றியும், அவரது மகன் இன்பநிதி பற்றியும் கூறினார் . அதாவது, திமுகவினர் எப்போதும் விஸ்வாசமாக இருப்பவர்கள். கலைஞர் குடும்பம் எண்ணற்றவர்களை எம்.எல்.ஏ, எம்.பியாக மாற்றியவர்கள். அந்த குடும்பத்திற்கு விஸ்வாசமாக இல்லாமல் யாருக்கு விஸ்வாசமாக இருப்போம்.? என […]
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் முக்கிய பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The #Twitter account of Honourable Minister […]
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த […]
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் […]
தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு. நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு […]
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் பிரபல ரவுடிகளை கண்காணித்து, அதில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அடுத்ததாக, […]
நாங்கள் ஒழுங்காக வேலை செய்தால் உங்களுக்கு வேலை பளு குறைவு. எங்களை மாதிரி ஆட்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள். சில நேரம் சிரித்து பேசுவார்கள். சில நேரம் கோபப்படுவார்கள். – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு. இன்று திருச்சியில் நடைபெற்ற பொது சுகாதர ஆய்வு பணிகள் குறித்த மாநில ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதில் குறிப்பிடுகையில், நாங்கள் ஜெயித்தால் மட்டுமே […]
சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேச்சு. நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் என பேட்டி அளித்திருந்தார். இதுகுறித்து, அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கூறுகையில், ‘சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்; ஓராண்டில் எவ்வளவு […]
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கபடும். – தமிழக அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் இந்த பணிகள் மிக வேகமாக நடைபெற்று […]
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மறைந்த ராமஜெயத்தின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். நீட் தேர்வில் இருந்து விடுதலை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கான நடைப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின். சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்காக பல பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினா கடற்கரையில் மரப்பாதையை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின் […]
வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இது தான் காரணம். சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், வீடுகளில் தின்பண்டங்கள் செய்பவர்கள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வணிக சிலிண்டர்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு […]