தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார். தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, கடந்த 21ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். மாவட்டம் முழுவதும் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த […]