சைபர் கிரைம் குற்றங்களை அரசு பொறுத்துக்க கொள்ளாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்று வலைத்தளங்கள் சில இடங்களில் மிக தவறான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் அதை தவறாக பயன்படுத்தக்கூடிய நிலைப்பாடு உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரையில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுபவர்களை, இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இது தொடர்பான சட்டங்களை இயற்றுவது மாநில […]