இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது. இந்த நிகழ்வில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். […]