அமெரிக்க தூதரகம் முன்னதாக போராட்டம் நடத்த விஎச்பி முயற்சி..!
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., இந்திய அமைப்புகளை வகைப்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஐ ‘தேசியவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை ‘தீவிரவாத மதக்குழுக்கள்’ என்று வகைப்படுத்தி உள்ளது. இதற்கு விசுவ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், ‘‘விசுவ இந்து பரிஷத் ஒரு தேசியவாத அமைப்பு. நாட்டு நலனுக்காக செயல்பட்டு வருகிறது. எனவே, சி.ஐ.ஏ.வின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. […]