கானௌரி எல்லையில் காயமடைந்த விவசாயிக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹரியானா காவல்துறைக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளும், மத்திய அரசுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதபடி […]
பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் […]
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை முன்னதாக ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து,தற்போது தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுள்ளதாகவும்,பதவியை தொடரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.அக்கடிதத்தில்,காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை கருத்தில் கொண்டு அதன் நலனைக் காக்கும் வகையில் தனது பதவியை […]
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்பட்ட மோதல்போக்கு காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். பின்னர், அமித்ஷாவை சந்தித்து அமரீந்தர் சிங் பேசியதால் பாஜகவில் இணைப்போவதாக கூறப்பட்டது. பிறகு அமிரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அமரீந்தர் சிங் தேர்தலை […]