தமிழ் சங்க நிகழ்ச்சியில் தமிழ் மக்களிடையே பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒருபுறம் கடந்தகால களஆய்வு, மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என தெரிவித்துள்ளார். துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் […]
அபுதாபி:முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை தற்போது சந்தித்துள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டுள்ளார். தமிழகத்திற்கு புதிய முதலீடுகள் கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது.பின்னர்,அபுதாபியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல். முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.