அதிக கட்டணம் வசூலித்ததாக 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விடுமுறை காலம் வந்தாலே, தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்து விடும். அதையும் மீறி ஒரு சில தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாக இருந்து தான் வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் விடுமுறைக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு தனியார் பேருந்துகளில் […]
மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம். போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ₹7 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல் அளித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, மதுரை மாநகரில் விதிமுறை மீறி பொருத்திய வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு. நடிகர் விஜய் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க காரில் சென்றிருந்தார். அப்போது விஜய் தனது காரின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக கூறி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடிகர் விஜய்க்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபட்ட 10 நாட்களில், சென்னையில் ₹.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அக்டோபர் 26 தேதி அமல்படுத்தபட்டது. சென்னையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 10 நாட்களில், 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் […]
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் […]
சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 […]
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 28ஆம் தேதி தலைக்கவசம் நிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் […]
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. பொதுவாகவே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அவசரமாக செல்லும் போது, முன் செல்லும் வாகன ஓட்டிகளும், எதிரே வரும் வாகன ஓட்டிகளும் வழி விட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் இதிலும் சிலர் வழி விடாமல் செல்வதுண்டு. இதனால் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்படுவதுண்டு. […]
ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு […]
சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னையில், கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக […]
ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது […]
டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்தது. அதன்படி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் முக கவசம் அணியுமாறு […]
தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள செல்பி மோகத்தால் ரயில் படிக்கட்டுகள்,ரயிலின் மேல் நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது போன்ற விபரீதங்களால் இளைஞர்கள் பலி என்ற செய்தியை அவ்வப்போது நம் படித்து வருகிறோம். இந்நிலையில்,உயிருக்கு ஆபத்தான இச்செயல்களை கட்டுப்படுத்த ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.மேலும், கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் […]
நடிகர் விஜய் BMW எக்ஸ் 5 காருக்கு ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்த நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தமிழ்நாடு வணிகவரித்துறை எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதித்தது உள்ளிட்ட தகவல்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் அவர்கள் அமெரிக்காவில் இருந்து BMW எக்ஸ் 5 என்ற காரை இறக்குமதி செய்துள்ளார். 2005-ஆம் ஆண்டு இறக்குமதி செய்த இந்த காரின் மதிப்பானது ரூ.63 […]
சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதுடன், உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடைகளை அபராதம் செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூன்று நாளில் பெற்று […]
மாடலிங் செய்யவுள்ள பெண்ணுக்கு தவறான முடி திருத்தம் செய்ததால், அவருக்கு இழப்பீடாக 2 கோடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடல் தேர்வுக்காக முடி திருத்தம் செய்வதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடி வெட்ட கூறியுள்ளார். ஆனால் தனது மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல […]
கர்நாடகாவில் தனது பிறந்தநாள் அன்று கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனுக்கு கிராமத்தினர் 35,000 அபராதம் விதித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் மியாபுரா எனும் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தலித் சமூகத்தினர் கோவிலுக்கு செல்ல வேண்டுமானால், வெளியே நின்று தரிசனம் செய்வது வழக்கமாம். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு 4 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் […]
மதுரை மாநகரில் கோரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருத்துவப்பணிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய அரசு மருத்துவமனை செவிலியர்கள் வந்த ஆட்டோவிற்கு மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவலர்கள் ரூ.500 அபராதம் விதித்தனர். அவர்கள் அடையாள அட்டைகளை காட்டியும் கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற அவர்களிடம் காவலர்கள் கருணையில்லாமல் நடந்து கொண்டதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவப்பணி, காவல்பணி, […]
தமிழ்நாட்டில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகளில் நிறுவனங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழில் இடம் பெற வேண்டும், தேவைப்பட்டால் ஆங்கிலம் பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் எழுதினால் 5:3 வீதத்திலும், தமிழ், ஆங்கிலம், பிறமொழி முறையே 5:3:2 என்ற வீதத்தில் இருத்தல் வேண்டும் என்பது விதி. ஆனால் அதை பெரும்பாலோனோர் பின்பற்றுவது இல்லை. இந்நிலையில். தாய்மொழித் திருநாளையொட்டி சென்னை தரமணியில் உலகத் தமிழராய்சி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் […]
கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்து வரும் இந்திய அணி நியூசிலந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அபராதம்.மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக விளையாடி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.தற்போது 3ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் துவங்கியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டியிலும் இந்திய […]