2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். நியுசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையில்,இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புகைப்பழக்கத்தை படிப்படியாக […]
மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என அன்புமணி ட்விட். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், […]
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என அன்புமணி ட்வீட். புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் […]
ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால்,அவர்களுக்கு ரூ.50,00,000க்கு தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், […]
பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது.இதனையடுத்து,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்று மற்றும் நாளை விவாதம் நடக்கிறது என்றும்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார். இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி […]
பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று, தமிழ்நாட்டில் சிறந்த உடை அணியும் அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயர்களை தர வரிசைப்படி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் முதலிடத்தை பாமக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், திமுகவின் மக்களவை உறுப்பினர் கலாநிதி மாறன் அவர்கள் பெற்றுள்ளார். […]
உச்சநீதிமன்றத்தில் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக அன்புமணி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள […]