வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்பொழுது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, […]
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் போல செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மட்டுமல்லாமல், சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கும் அமைச்சராக இருப்பதால் கிட்டத்தட்ட துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என புகழ்ந்து […]
ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு […]
அமைச்சர்கள் உதயநிதி , அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு என கூறி சிலர் வசூலித்ததாக லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறி சிலர் நான்கொடை வசூல் செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் இந்த வசூல் வேட்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை லஞ்ச ஒழிப்பு துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து […]
கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் […]
அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான். […]
மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு […]
சென்னையில் இன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இறந்துவிட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அமைச்சர் […]
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை, தேர்வுக்கான பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், LKG, UKG வகுப்புகளுக்கான தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதிய உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், வரும் 10-ம் தேதி நிதியமைச்சருடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பள்ளிகளில் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் […]
தொடக்கப்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மாணவர்கள் அடுத்து 6ஆம் வகுப்பு மேல் சரியாகி விடுவார்கள். ஆதலால், தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது என்றால், அது மாணவர்கள் தான். அவர்களின் கல்வித்திறன் வெகுவாக குறைந்துள்ளது என்ற குற்றசாட்டு பொதுவாக கூறப்படுகிறது. தற்போதைய காலாண்டில் தான் முழுமையாக மாணவர்கள் ஆரம்பம் முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று படித்து வருகின்றனர். […]
ப்ளூ காய்ச்சலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த காய்ச்சல் அதிகரித்து வருவதால், பள்ளிக்குழந்தைகளுக்கு புதுசேரி அரசு போல, தமிழக அரசும் விடுமுறை அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை […]
முத்து குமரனின் உடல் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி. திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்திருந்த நிலையில், குடும்பத்தினருக்கு அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் […]
அமைச்சர் அன்பில் மகேசுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பேப்பரில் தம்பி மகேஷ்..! அருமை, அற்புதம், அபாரம் என பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 […]
நாளை நடைபெறவுள்ள 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் கணித வினாத்தாள் புதிய வினாத்தாள்கள் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் லீக்கானது. இந்நிலையில், புதிய வினாத்தாள் மூலம் 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இரண்டாவது திருப்புதல் தேர்வுகளில் கணித வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை எனவும் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் […]
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பழுதடைந்துள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிப் பேருந்து இயக்க வேண்டும் என்றால் பள்ளி அனுமதி பெறவேண்டும். பேருந்தில் கண்டிப்பாக அட்டெண்டர் […]
இன்று மதியம் 1 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் […]