அன்னவாசலில் சோறு அளித்த சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார். அதில் பெப்சி தொழிலாளர்களின் நலனை […]