டெல்லியில் ஜனவரி 13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13ம் தேதி பிற்பகல் 3.30 அமித் ஷாவை சந்திக்கிறது அனைத்துக்கட்சி குழு. சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறு அமித் ஷாவை சந்தித்து அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தவுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கான மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. […]