அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 12 லாரிகள் பறிமுதல்..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விராலிமலை சுற்றுவட்டாரத்திலுள்ள ஆற்றுப் படுகைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை, கீரனூர், விராலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 12 லாரிகளைப் பறிமுதல் செய்து விராலிமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.