உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை […]