வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளதால், இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெய்த மழையால், பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையின் தரைத்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து! இந்த […]
கடந்த 24 மணிநேரம் வரையில் ஈரோடு மாவட்டத்தில் 815.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. அதில் மிதமான மழை.கனமழை என மாறி […]
கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி […]