உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உதயநிதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இபிஎஸ்-க்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசின் அச்சுறுத்தலால் பதற்றத்தில் உள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி […]