வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியார்களை சந்தித்து திமுக அரசு மீது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தற்போது தீர்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதில் கூறும் விதமாக ஆதாரபூர்வமாக எடப்பாடி […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிராகவும், திமுக அரசுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேரு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிமுக தரப்பில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் உடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பாதுகாப்பு காரணமாக அதிமுகவினர் […]
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 % முதல் அதிகபட்சமாக 150 % வரை உயர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு விடுத்தது. அதிமுக கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று பல இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து நேற்று […]
இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. எனினும்,ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி […]
லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சொத்து குவித்ததாகவும்,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச […]
முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி […]
நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டிகட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு? வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளதாகவும், அதற்கு அரசின் ரசீது இருப்பதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக […]