இன்று சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு , செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பல்வேறு முக்கிய அதிமுக பிரமுகர்கள் மற்றும் […]
சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10.35 மணிக்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள […]
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை அளித்து இருந்தனர். இதில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பு பதில் அளித்து இருந்ததால், […]
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை ஓபிஎஸ் மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டுவதற்கு முன் ஓபிஎஸ்-க்கு வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. தொண்டர்களின் விருப்பதிற்கிணங்கவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே […]
அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்பு வாதம். ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது […]
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து முதலில் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் ஒற்றை நீதிபதி தலைமை ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11 பொதுக்குழு […]
ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தரப்பு தீர்ப்பளித்தது. […]
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பிலும் கேவியெட் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் எனவும் மாறி மாறி தீர்ப்பளித்தனர். தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே […]
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார். தமிழக அரசியலில் மிக முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தற்போது இரு பிளவாக பிளவு பட்டு இருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் இபிஎஸ் தரப்பு ஒருபுறம் என இருவரும் கட்சி பிரச்னையை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த […]
அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி இபிஎஸ்-க்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது […]
ஓபிஎஸ் தரப்பு எங்கு சென்றாலும் நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம் என்று தங்கமணி பேட்டி. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, […]
இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த […]
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் […]
ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே […]
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் […]
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நாளை […]
பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம். சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர், கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்,அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படும் தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,மேடையில் பேசிய அவர் கூறியதாவது:”பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று ஓபிஎஸ், மனோஜ், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். குறிப்பாக,ஓபிஎஸை கட்சியிலிருந்து நீக்குவதற்கான […]
திருவண்ணாமலையில் இருந்து பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக வந்த வேன் மீது லாரி மோதி விபத்து. இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் வந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் செல்லும் பொழுது எதிர் சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் […]