அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் […]