பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து,திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்களை,எடை குறைவான பொருட்களை அளித்து மக்களை ஏமாற்றிவிடலாம்.மக்கள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்று தி.மு.க. நினைத்திருக்கக்கூடும்,அதனுடைய விளைவுதான் 1,250 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிப்பு எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,தரமற்ற,மட்டமான பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் […]
சென்னை:அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும்,நாளை(அதாவது இன்று 7.12.21) தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று (6.12.21) மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் […]
சென்னை:அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில்,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும்,நாளை(அதாவது இன்று 7.12.21) தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று (6.12.21) மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,மனுவே […]
சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில்,புதிய அவைத்தலைவர்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளதையடுத்து, […]
ஃபோர்டு நிறுவனம் மூடுதல் எதிரொலியாக 40,000 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும்,அந்நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம்,ஆலையை மூடுவதாக அறிவித்ததையடுத்து,மாற்று ஏற்பாடுகள் குறித்து அதன் நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக […]