Tag: அதிமுக உட்கட்சி தேர்தல்

#Breaking:அதிமுக உட்கட்சி தேர்தல்;ஈபிஎஸ் மேல்முறையீடு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால்,இதனை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி மகனான சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் […]

#ADMK 7 Min Read
Default Image

அதிமுக உட்கட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும்,கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி […]

#ADMK 5 Min Read
Default Image

#Breaking:ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனக்கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை கடந்த டிச.7 […]

#EPS 4 Min Read
Default Image

#Breaking:அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் தொடங்கியது!

சேலம்:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தலை சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். அதிமுக சட்ட திட்ட விதி – 30, பிரிவு – 2-ன்படி “அதிமுக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப ,தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் […]

#ADMK 7 Min Read
Default Image

அதிமுக உட்கட்சி தேர்தல்;இன்று தொடக்கம்!எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?..!

சென்னை:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள்  முதற்கட்டமாக இன்றும்,நாளையும் நடைபெறுகின்றன. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால்  அறிவிக்கப்பட்டது. […]

AIADMK elections 9 Min Read
Default Image